26.7 C
Chennai
September 27, 2023
இந்தியா

ஊழல் மோசடி புகார்; காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் 12 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது தொடர்பாக முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவின் 12 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் முதல்வராக பரூக் அப்துல்லா இருந்தபோது, கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பு (பிசிசிஐ) ஜம்மு காஷ்மீர் மாநிலக் கிரிக்கெட் அமைப்புக்கு வழங்கிய நிதியில் 43.69 கோடி ரூபாய் நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் விசாரணை நடத்திய சிபிஐ அமைப்பு, முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் பொதுச் செயலாளர் முகமது சலீம் கான், பொருளாளர் அஸன் அகமது மிர்ஸா, மிர் மன்சூர் காசன்பர் அலி, பசிர் அகமது மிஸ்கர், குல்சர் அகமது பெய்க் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கம் (ஜே.கே.சி.ஏ) பணமோசடி வழக்கு தொடர்பாக தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபாரூக் அப்துல்லாவின் 11.86 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்க இயக்குநரகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இணைக்கப்பட்ட சொத்துக்களில் இரண்டு குடியிருப்பு மற்றும் ஒரு வணிக சொத்துக்கள் மற்றும் மூன்று நிலங்கள் அடங்கும். இந்த சொத்துக்களில் சந்தை மதிப்பு 60 முதல் 70 கோடி ரூபாய் வரை இருக்கும் எனவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

‘ஊழல் என்று சொல்ல வேண்டாம்.. மாறாக’ – ப.சிதம்பரம் விமர்சனம்

Web Editor

தன்பாலின திருமணத்துக்கான அங்கீகாரம் கோரும் வழக்கு – அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

Web Editor

சபரிமலை: 24 மணி நேரமும் பணியில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு

EZHILARASAN D

Leave a Reply