ஊழலின் மொத்த உருவமாக திமுக திகழ்வதாக, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை ஆவடியில், முதலமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக மீது திமுக அளித்த முதல் புகாரிலேயே, எந்த ஆதாரமும் இல்லாதபோது, மீண்டுமளித்த புகாரிலில் எதுவும் இருக்கப்போவதில்லை எனவும், ஊழலின் மொத்த உருவமாக இருக்கும் திமுக, ஊழல் குறித்து பேசுவது தவறு எனவும் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டின் பொருளாதாரம் 18 லட்சம் கோடியை தாண்டியதாகவும், கொரோனா காலத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், தமிழக அரசு மக்களுக்காக செலவிட்டதாகவும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்