உலக பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 11வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
உலக பணக்காரர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் வெளியிட்டு வருகிறது. ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி கடந்த சில மாதங்களாகவே இந்த பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இடம்பெற்றிருந்தார். கொரோனா காலத்தில் ஜியோ நிறுவனத்தில் கோடிக்கணக்கான முதலீடுகள் குவிந்தன. இதன் காரணமாக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி ஒவ்வொரு இடமாக முன்னேறி வந்தார். இது பலராலும் பரபரப்பாக பேசப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.5.63 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 186 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க் பிடித்துள்ளார். இதற்கு அடுத்தடுத்த இடங்களை பில்கேட்ஸ், பெர்னார்ட் அர்னால்ட், மார்க் ஜூக்கர்பெர்க் ஆகியோர் பிடித்துள்ளனர்.