புவி வெப்பமயமாதல் காரணமாக பருவநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் காற்று மாசு மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் உலக தலைவர்கள் பருவநிலை அவசரநிலையை அறிவிக்குமாறு ஐநா தலைவர் அந்தோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புக்கு பிறகு உலக நாடுகள் பருவநிலை மாற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பருவநிலை மாற்ற விவகாரத்தில் கடந்த 2015ம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் உலக நாடுகளை ஐநா எச்சரித்துள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு காணொலி காட்சி மூலமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் பேசிய பிரதமர் மோடி, உலகின் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு இந்தியா குறைந்த அளவே காரணமாக இருக்கும் எனவும் உறுதிபட தெரிவித்தார்.