உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து முதியவருக்குப் போடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் வடகிழக்கில் உள்ள டைன் மற்றும் வேர் நகரில் வசித்து வரும் 87 வயதான ஹரி சுக்லா என்பவருக்கு உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நியூகேஸில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு முதலாவது இரண்டு டோஸ் ஃபைசர் / பயோஎன்டெக் ஜப் என்ற கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொண்டது தமது கடமை என்று உணர்வதாக ஹரி சுக்லா தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த பெரும் தொற்று முடிவுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். பெரும் முயற்சி முன்னெடுக்கப்பட்ட இந்த நாள் இங்கிலாந்தின் தடுப்பூசி தினம் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.