முக்கியச் செய்திகள் இந்தியா

உலகின் எடை குறைவான இரண்டு வகை செயற்கைக்கோள்களை தயாரித்து தஞ்சை மாணவர் சாதனை!

உலகிலேயே மிகவும் எடை குறைவான இரண்டு வகை செயற்கைக்கோள்களை தயாரித்து தஞ்சை மாணவர் சாதனை படைத்துள்ளார்.

தஞ்சையை அடுத்த கரந்தை பகுதியில் வசித்து வருபவர் கல்லூரி மாணவர் ரியாஸ்தீன். இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் படித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த I Doodle Learning நிறுவனம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா உடன் இணைந்து cubes in space என்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியை ஆண்டுதோறும் நடத்துகிறது. அதில் மாணவர் ரியாஸ்தீன் 2019-2020-க்கான போட்டியில் கலந்து கொண்டு தேர்வாகியுள்ளார். இவர் கண்டுபிடித்த Femto சாட்டிலைட்கள் நாசாவில் இருந்து வரும் 2021ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

73 நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டிகளில் இரண்டு சாட்டிலைட்டுகளை வடிவமைத்து மாணவர் ரியாஸ்ஹீன் சாதனை படைத்துள்ளார். இந்த சாட்டிலைட்களுக்கு விஷன் சாட் V1 மற்றும் V 2 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இரு சாட்டிலைட்களும் 33mm உயரமுடையது மற்றும் 33 கிராம் எடையுடையது. இந்த இரு சாட்டிலைட் உலகிலேயே மிகவும் எடை குறைவான பெம் டோ செயற்கைக்கோள்கள் ஆகும்.

இந்த இரு சாட்டிலைட்களும் பாலி எதரி இமைடு அல்டம் என்று சொல்லக்கூடிய தெர்மோ பிளாஸ்டிக்கை கொண்டு 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 11 சென்சார்கள் உள்ளன. அதன் மூலம் 17 parameterகளை கண்டறிய முடியும். இவை இரண்டும் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் நாசாவில் சவுண்டிங் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக மாணவர் ரியாஸ்தீன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிளஸ்2 தேர்வுக்கு பயந்து மாணவன் தீக்குளித்து தற்கொலை

Halley Karthik

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு சமவாய்ப்பு: பாமக தலைவர் ஜி.கே.மணி

Arivazhagan Chinnasamy

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை!

Leave a Reply