இந்தியா செய்திகள் சட்டம்

உரிய நேரத்தில் ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்து வழங்கப்படும்! – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

உரிய நேரத்தில் ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் மக்களவையில் ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா பற்றிய அலோசனையில் அமித் ஷா இதனை தெரிவித்தார்.

மேலும் கடந்த 70 ஆண்டுகளாக மத்தியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியால் ஜம்மு & காஷ்மீருக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்று கடுமையாக சாடிய அவர், தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசிடம் பதில்களை எதிர்பார்ப்பது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.

“நான் இந்த அவையில் பலமுறை கூறியிருக்கிறேன். தற்போதும் கூறுகிறேன். இந்த மாசோதாவிற்கும் ஜம்மு & காஷ்மீருக்கான மாநில அந்தஸ்த்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. உரிய நேரத்தில் ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்து வழங்கப்படும். நான் தான் இந்த மசோதாவை கொண்டு வந்தேன், இந்த மசோதாவின் நோக்கத்தை பலமுறை அவைக்கு தெளிவுபடுத்தியுள்ளேன். எந்த இடத்திலும் ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்து வழங்கப்படமாட்டாது என்று குறிப்பிடப்படவில்லை. பின்னர் எதன் அடிப்படையில் இவ்வாறு ஒரு முடிவுக்கு வருகிறீர்கள்? தயவு செய்து இம்மசோதாவைப் பற்றிய தவறான தகவல்கள் பரப்புவதை நிறுத்துங்கள். இதற்கு முன்னர் எந்த ஒரு யூனியன் பிரதேசத்திற்கும் மாநில அந்தஸ்த்து வழங்கப்படவில்லையா? அல்லது எல்லை மாநிலங்களுக்கு மாநில அந்தஸ்த்து வழங்கப்படவில்லையா? எந்த வகையில் ஜம்மு & காஷ்மீர் மற்றும் இதற்கு மாறாக இருக்கிறது? அரசியல் அமைப்பு சட்டம் 370 பற்றி கேள்வி கேட்கும் எதிர்கட்சியினர் கடந்த 17 மாதங்களாக என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. கடந்த 70 ஆண்டுகளாக ஜம்மு & காஷ்மீர் பற்றிய தகவல்களை சரியாக பராமரித்திருந்தால் எதிர்கட்சியினருக்கு எங்களிடம் கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இருக்காது” என்று கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

பாரத ரத்னா எம்ஜிஆர், பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்! – பிரதமர் மோடி

Nandhakumar

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இன்று வெளியாகிறது

Saravana Kumar

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!

Ezhilarasan

Leave a Reply