இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிரான புதிய சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள திருமணத்திற்காக கட்டாய மதமாற்றம் செய்வதற்கு எதிரான சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. .

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும் வகையில் ‘லவ் ஜிகாத்’துக்கு எதிரான அவசரச் சட்டத்துக்கு அம்மாநில அரசு கடந்த 24 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து திருமணத்துக்காக கட்டாய மதமாற்றம் செய்யப்படும் குற்றங்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் நேற்று முந்தினம் அனுமதியளித்திருந்தார்.

இந்நிலையில் இந்த கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பரேலி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. ஒரு பெண்ணைப் பலவந்தமாக மதம் மாற்றி திருமணம் செய்வதற்கான மோசடியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தியோரானியா காவல் நிலையத்தில் நேற்று முந்தினம் மாலை பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து புகார் அளித்தனர். மதம் மாற்றுவதற்காக இளம்பெண்ணைக் கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கிய நபர் தற்போது தலைமறைவாகியுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கு வாய்ப்பு மறுப்பு; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Halley Karthik

மன்மோகன் சிங் உடல் நிலை சீராக உள்ளது : எய்ம்ஸ்

Halley Karthik

புதுச்சேரியில் தடுப்பூசி திருவிழா – துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் ஆய்வு!

Halley Karthik

Leave a Reply