உலகம்

உட்கட்சி பூசல் எதிரொலி; நேபாள நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் கே.பி ஷர்மா ஒலி பரிந்துரை!

நேபாளத்தில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியில் உட்கட்சி பூசல் வலுக்கத்தொடங்கியுள்ளதை தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைக்குமாறு அதிபருக்கு அந்நாட்டு பிரதமர் கே.பி ஷர்மா ஒலி பரிந்துரைத்துள்ளார்.

நமது அண்டை நாடான நேபாளத்தில் பிரதமர் கே.பி ஷர்மா ஒலி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனை, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரதமர் கே.பி ஷர்மா ஓலிக்கும் அவரது சொந்த கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. இதனிடையே நேபாள அரசியலமைப்பு சட்ட கவுன்சில் பெரும்பான்மை உறுப்பினர்கள் பங்கு கொண்டால் கூட்டம் நடத்தலாம் என்றும் திருத்தங்களை செய்யலாம் என்றும் அவசர சட்டம் மூலம் திருத்தம் செய்யப்பட்டது. இந்த அவசரச் சட்டத்தை நேபாள அமைச்சரவை அங்கீகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேபாள நாடாளுமன்றத்தை கலைக்குமாறு அதிபருக்கு அந்நாட்டு பிரதமர் கே.பி ஷர்மா ஒலி பரிந்துரைத்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி பிரதமர் பெரும்பான்மை ஆதரவை இழந்து விட்டார் கே.பி ஷர்மா ஒலி இழந்துவிட்டார் எனவும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி ஆளும் கட்சியின் செயலகத்திலும் சர்மா ஒலிக்கு இப்பொழுது பெரும்பான்மை ஆதரவு கிடையாது என்றும் அக்ககட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திவெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அடித்தது ஜாக்பாட்.. பரிசுத்தொகை ரூ.40 கோடி, திக்குமுக்காடிய இளைஞர்

Gayathri Venkatesan

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்வு…அதிர்ச்சியில் மக்கள்!

Janani

திலீபனுக்கு நினைவஞ்சலி: இலங்கை தமிழ் எம்.பி திடீர் கைது

EZHILARASAN D

Leave a Reply