
உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு முதல்வர் பழனிசாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய இந்த விருதை தமிழக அரசு சார்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியதற்காக 6-வது முறையாக இந்த விருதினை பெறுவதில் மகிழ்ச்சி அடைவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுமட்டுமல்லாமல் சுகாதாரத் துறையிலும் தலைசிறந்து முன்னோடி மாநிலமாகவும், மற்ற மாநிலங்கள் பின்பற்றக் கூடிய வகையில் தமிழகம் செயல்படுவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்த விருதினை பெற உறுதுணையாக இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
மத்திய அரசின் பாராட்டுகள் மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவ பணியாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.