முக்கியச் செய்திகள் உலகம்

இஸ்ரேலில் முதல் நபராக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு!

கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. சில கொரோனா தடுப்பூசிகள் முன்னேற்றத்தை கண்டுள்ளன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலில் முதல் நபராக பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். மக்களுக்கு தடுப்பூசி மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவருடன் இணைந்து இஸ்ரேல் சுகாதார அமைச்சரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கு முன்னதாக அமெரிக்கா துணை அதிபர் மைக் பென்ஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் இன்னும் சில நாட்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்காக உலக தலைவர்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நேரடி பணியாளர் தேர்வு அறிவிப்பாணை ரத்து

Dinesh A

சென்னை : திருமணம் தாண்டிய உறவு – மனைவியின் நகைகளை தாரைவார்த்த கணவன்

Dinesh A

சென்னையில் விடாது பெய்யும் மழை: தாம்பரத்தில் 232.9 மி. மீ மழை பதிவு

Halley Karthik

Leave a Reply