செய்திகள்

இளையராஜா பாடலுடன் Send Off செய்த நண்பர்கள்..

இறுதி ஊர்வலத்தில் இளையராஜா பாடலை பாடி வழியனுப்பிய மரணித்தவரின் நண்பர்கள்.

தற்சமயம் நம் காதில் கேட்கும் சொல்லும் மரணம், மரணம்,மரணம்… தொடர்ச்சியாக மரணங்கள் நம்மை அயர்ச்சியடைய செய்து தூங்கவிடாமல் செய்தாலும். சிலதருணங்கள் நம்மை நெகிழ்ச்சியடையவே செய்கிறது.

வயதான வாழ்ந்து அனுபவித்த பெரியவர்கள் மரணித்தால் கிராமங்களில் ‘கொட்டு’ , ‘மைக் செட்’ , ‘சோகபாடல்’ என பட்டையை கிளப்பி வழியனுப்பி வைப்பார்கள்.

‘படைத்தானே’, ‘போனால் போகட்டும் போடா’, ‘வீடுவரை உறவு’, ‘சட்டி சுட்டதடா கைவிட்டதடா’ என்ற TMS குரலில் ஒலிக்கும் இப்பாடல்களும் இளையராஜா இசையில் எஸ்பிபி பாடிய ‘வானம் தொட்டு போனா…மானம்முள்ள சாமி’ என்ற பாடலும் துக்க வீட்டில் ஒலிக்கும் போது கலங்காத மனம்படைத்தவர்கள் கண்ணில் கூட கண்ணீர் கொப்பளிக்கும்.அதுபோல மயானத்தில் அந்த பிரேதத்திற்கு கீழ் அவர்கள் விரும்பிய பொருட்களைவைப்பார்கள்.

நேற்றைய முன்தினம் மலேசியாவில் இளையராஜாவின் ரசிகர் ஒருவர் உடல்நல குறைவால் திடீரென மரணித்துள்ள நிலையில் அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரது நண்பர்கள் இணைந்து இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கிட்டார் உள்ளிட்ட இசைக்கருவிகளுடன் இளையராஜாவின் பாடல்களை பாடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.

மரணித்தவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை அஞ்சலிகள் அந்த மரணித்தவருக்கு தெரியாதுதான் ஆனாலும் ஆன்மாக்கள் என்ற ஒன்று இருப்பது நிஜம் என்றால் அந்த இசையை கேட்டு நிச்சயம் நித்திய உறக்கம் கொள்ளும்.

Advertisement:

Related posts

ஓபிஎஸ் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு!

எல்.ரேணுகாதேவி

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா!

Gayathri Venkatesan

தலையில் சிக்கிய பாத்திரம்: முட்டி மோதித் தவித்த குட்டிக் குரங்கு!

Karthick