உலகம்

இலங்கையில் பிச்சை எடுப்பது மற்றும் வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிப்பு!

இலங்கையில் பிச்சை எடுப்பவர்கள் மட்டுமின்றி கொடுப்பவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க இலங்கை காவல் துறையினர் தீர்மானித்துள்ளனர். 

பிச்சை எடுப்பது மற்றும் வழங்குவது தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகக் கருதப்படும் என இலங்கை காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோகன குறிப்பிட்டுள்ளார். ஆனால் எந்த விதமான தண்டனை வழங்கப்படும் என அவர் தெரிவிக்கவில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீப காலமாக இலங்கை தலைநகர் கொழும்பு உட்பட முக்கிய நகரங்களில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இது குறித்து இலங்கை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. இலங்கையில் பிச்சை எடுப்பவர்களில் 95 வீதமான பேர் உண்மையான பிச்சைகாரர்கள் கிடையாது என இலங்கை காவல் துறை தெரிவிக்கிறது.

மேலும் வர்த்தக நோக்கத்துடன் பிச்சை பெறுவோர் தற்போது அதிகரித்து உள்ளதாகவும் ஒருவரின் தலைமையில் ஒரு குழுவாக இவர்கள் இயங்குவதாகவும் பிச்சை எடுப்பவர்களுக்கு தின சம்பளத்தை அந்த நபர் வழங்கி வருவதாகவும் இலங்கை காவல் துறை கூறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஓய்வுக்காக வீடுதிரும்பும் விராட் கோலி

G SaravanaKumar

நிறம் மாறிவரும் சனி கிரகம்!

எல்.ரேணுகாதேவி

சுவர்களில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது, திருப்பி சிறுநீரை அடிக்கும் சுவர்; இணையத்தில் வைரல்

Yuthi

Leave a Reply