முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

இலக்கிய வரிகள், எளிமையாக அமைக்கப்பட்ட திரைப்பட பாடல்களின் தொகுப்பு


ஜே.முஹமது அலி

கட்டுரையாளர்

பொருள் பொதிந்த இலக்கிய வரிகளில் உள்ள தமிழை அறிந்து, எளிமையாக, இனிமையாக தந்ததால் சில திரைப்படப் பாடல்கள் மனதில் நிலைத்து நிற்கின்றன. அப்படிப்பட்ட சில பாடல்களின் சிறு தொகுப்பு இது. வாருங்கள் பார்க்கலாம்..

ராமாயணம் தந்த கம்பரின் கற்பனை வரிகளால் ஈர்க்கப்பட்ட தமிழ்த் திரைப்படக் கவிஞர்கள், கம்பனின் கவிதையில் பொதிந்த கருத்துகளை எளிமையான பாடல்களாக தந்துள்ளனர். அவற்றில் சிலவற்றை எளிமைப்படுத்தி தந்தவர் கவியரசு கண்ணதாசன்.

அசோகவனத்தில் வருத்தத்துடன் அமர்ந்திருந்த சீதை, ராமன் ஏற்கெனவே தன்னிடம் சொன்னதை அனுமனிடம் சொல்வதுபோல் ஒரு காட்சி வரும், “இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன்” என ராமன் கூறியதை எளிய வார்த்தைகளால் தந்திருப்பார் கண்ணதாசன்.

இந்தப்பிறவியில் சீதையாகிய உன்னைத்தவிர வேறொரு பெண்ணை மனதாலும் தொடமாட்டேன் என்ற கம்பனின் கருத்து சிதையாமல், எளிமையாக ’வசந்தமாளிகை’ திரைப்படத்தில் “மயக்கமென்ன இந்த மவுனமென்ன’ பாடலில் “உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொடமாட்டேன் என தந்திருப்பார் கவியரசு கண்ணதாசன்.

ராவணனுக்கு அடிபணியுமாறு சீதையை அரக்கர்கள் கோபத்தோடு சொல்ல, சீதை அழுதுகொண்டே சிரிக்கின்றாள். அதைக் கம்பர் “கண்கள் கலுழ்ந்தே நகுகின்றாள்’ என்பதை கண்கள் கண்ணீர் வடிக்க சிரிக்கின்றாள் என குறிப்பிடுகிறார். இந்த வரியை கவியரசு கண்ணதாசன் பாவமன்னிப்பு திரைப்படத்தில், “சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்” என்ற பாடலில் கம்பரின் வரிகளுக்கு ஏற்ப, “நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்” என எழுதியிருப்பார் கவியரசு கண்ணதாசன்.

வேட்டைக்காரன் திரைப்படத்தில் கதாநாயகன் எம்ஜிஆர் பாடுவதாக வரும் ‘உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்’ என்ற பாடலில், மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும். இந்த கருத்து, திருவள்ளுவரின் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற குறள் தரும் செய்தியை எளிமையாக தந்திருப்பார் கண்ணதாசன்.

பொருள் பொதிந்த இலக்கிய வரிகளில் உள்ள தமிழை அறிந்து, எளிமையாக, இனிமையாக தந்ததால் திரைப்பாடல்கள் தெவிட்டாமல் நிலைத்து நிற்கின்றன.

Advertisement:
SHARE

Related posts

மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சமூகத்தின் சார்பாக நன்றி: நாசர்

Saravana Kumar

முழு ஊரடங்கு அமல்!

Ezhilarasan

இவர்தான் மலாலாவின் கணவர் அஸர் மாலிக் !

Halley Karthik