முக்கியச் செய்திகள் தமிழகம்

இறந்தவரின் உடலை வாங்க 2 மனைவிகளிடையே கடும் போட்டி

சிதம்பரம் அருகே, இறந்த கணவனின் உடலை பெற 2 மனைவிகளுக்கு இடையே போட்டி நிலவியதால் உடல் 3 நாட்களாக பிணவறையிலேயே காத்துக்கிடந்த அவலம் நிகழ்ந்துள்ளது.

சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி கிராமத்தைச் சேர்ந்தவர் கர்ணதேவன். கூலி தொழிலாளியான இவருக்கு புவனேஸ்வரி, ஜெயலட்சுமி என்ற இரு மனைவிகள் உள்ளனர். இதில், 2வது மனைவி ஜெயலட்சுமிக்கும் கர்ணதேவன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த கர்ணதேவன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதனால், மயக்கமடைந்து விழுந்த அவரை மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, நடைபெற்ற உடற்கூராய்வுக்குப் பின், கர்ணதேவனின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, அவரது உடலை பெறுவதற்கு, 2 மனைவிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டது. போலீசாரும், அதிகாரிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், கர்ணதேவனின் உடல், 3 நாட்களாக பிணவறையிலேயே காத்துக்கிடந்தது. இதையடுத்து, போலீசாரும், அதிகாரிகளும், கர்ணதேவனின் உடலை அவரது தாயார் கோவிந்தம்மாளிடம் ஒப்படைத்தனர்.

Advertisement:
SHARE

Related posts

ஜொமோட்டா ஊழியரை தாக்கிய பெண் மீது வழக்கு பதிவு

Jeba Arul Robinson

கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Vandhana

கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி – காவல்துறை

Halley karthi