இம்மா என்ற விர்ச்சுவல் மாடலை இன்ஸ்டாகிராமில் 3 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
imma.gram என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள புகைப்படங்களை நீங்கள் சிறிதுநேரம் பார்த்தால், அது உண்மையான பெண்ணாக இருக்கும் என நம்பிவிடுவீர்கள். ஆனால் அது ஒரு விர்ச்சுவல் மாடல். நிஜ பெண் போலவே தோற்றமளிக்கும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று இதனை அறிமுகம் செய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுமட்டுமல்லாமல் LVMH’s Celine உள்ளிட்ட பிராண்டுகளுடன் கைகோர்த்து அவர்களுக்காக விளம்பரமும் செய்கிறது இம்மா. ஃபேஷன் இதழ்கள், டிக்டாக் சேலஞ்சுகள் என அனைத்திலும் இந்த விர்ச்சுவல் மாடலை நீங்கள் பார்க்க முடியும்.
கொரோனா பாதிப்பால் அனைவரும் வெளியே சென்று புகைப்படம் எடுக்க முடியாமல் தவித்தனர். ஆனால் விர்ச்சுவல் மாடலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை
என்பதால் அடிக்கடி சூப்பரான புகைப்படங்கள் வெளியானது. இதனால் இம்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய ஆரம்பித்தது.