தொழில்நுட்பம்

இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட்!

தகவல் தொடர்பு சேவைக்காக இன்று மாலை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது பிஎஸ்எல்வி – சி 50 ரக ராக்கெட் – இதற்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்று மாலை 2.41க்கு துவங்கியது.

சி.எம்.எஸ் – 01 செயற்கைகோளுடன் இன்று மாலை 03.41 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் பாய உள்ளது பி.எஸ்.எல்.வி சி- 50 ரக ராக்கெட்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

CMS-01 என்பது அதிர்வெண் ஸ்பெக்ட்ரமின் விரிவாக்கப்பட்ட-சி பேண்டில் சேவைகளை வழங்குவதற்காக திட்டமிடப்பட்ட ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோள்.விரிவாக்கப்பட்ட-சி பேண்ட் கவரேஜில் இந்திய நிலப்பரப்பு, அந்தமான்-நிக்கோபார் மற்றும் லட்சத்தீவு தீவுகள் ஆகியவை அடங்கும்.மேலும் கல்வி, மருத்துவம்,பேரிடர் மேலாண்மை,சி-பாண்டு ஆகிய பணிகளுக்குத் தேவையான தரவுகளை பெறுவதற்காக இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்திய நிலப்பரப்பு மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் செல்போன் மற்றும் தகவல் தொடர்பு சேவையை இந்த செயற்கைக்கோள் மேம்படுத்த உதவும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் 22 வது திட்டம் இந்த பி.எஸ்.எல்.வி சி – 50, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும் 77வது விமானம் இதுவாகும்.

பி எஸ் எல் வி சி- 50 விண்ணில் பாய உள்ள நிலையில் அதற்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்று மாலை துவங்கியது – நான்காம் நிலை எரிபொருள் நிரப்பும் பணிகள் முடிந்துள்ளது,தொடர்ந்து மற்ற நிலைகளில் எரிபொருள் நிரப்பும் பணிகள் நடைபெறும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கடல் அலையில் சிக்கியவர்களை சில நிமிடங்களில் காப்பாற்றும் இயந்திரம்!

Dhamotharan

கூகுளை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் ஏற்பட்ட பிரச்னை…. பயனாளர்கள் அதிருப்தி!

Saravana

25% குறைந்த சிமெண்ட் உற்பத்தி!

Leave a Reply