கொரோனா காலத்திற்கு ஏற்ப திருப்பூரில் ப்ரைவசி (privacy) தியேட்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சத்திற்கு இடையே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள் செயல்பட்டு வந்தாலும், படம் பார்க்க அதிக அளவிலான மக்கள் கூட்டம் வருவதில்லை. இதனை கருத்தில் கொண்டு திருப்பூரில் ப்ரைவசி (privacy) தியேட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்துக்கு சொந்தமான மல்டிப்ளக்ஸ் திரையரங்கில், இந்த ப்ரைவசி (privacy) தியேட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 150 பேர் அமரக்கூடிய இந்த தியேட்டரில், ரூ.3 ,999 கட்டணமாக செலுத்தினால் 25 நபர்கள் வரை அனுமதிக்கப்படுவர். பிறந்தநாள் போன்ற கொண்டாடங்களுக்கு, ப்ரைவசி தியேட்டர் கொடுக்கப்படும் என்றும், விரும்பிய படம் திரையிடப்படும் என்றும் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்