இந்தியா

இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்கும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்!

குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும்படி இந்தியா விடுத்த அழைப்பை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் போரிஸ் ஜான்சனுடன் தொலைபேசி வழியே உரையாடியபோது, அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்தார். மோடியின் அழைப்பை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக் கொண்டதாக இந்தியாவுக்கான இங்கிலாந்து தூரகத்தின் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவுக்கு உலகத் தலைவர்கள் யாரும் வருகை தரவில்லை. கொரோனா தொற்று பரவல் தாக்கம் குறைந்து வரும் நிலையில் இந்தியாவுக்கு வரும் முதல் வெளிநாட்டு தலைவர் போரிஸ் ஜான்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

2ஜி விவகாரத்தில் வினோத் ராயின் பொய்யான அறிக்கை குறித்து விசாரிக்க வேண்டும்- ஆ.ராசா வலியுறுத்தல்

Web Editor

பிரதமர் வேட்பாளர் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் இடம்பெறக் காரணம் என்ன?

G SaravanaKumar

கடன் பெற்றவர்களை எக்காரணம் கொண்டும் மிரட்டக்கூடாது – ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

Dinesh A

Leave a Reply