விளையாட்டு

இந்திய அணி அபார பந்துவீச்சு… 2வது டெஸ்டில் 195 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா அணி!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும் டி20 தொடரை இந்தியாவும் ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படு தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. விராட் கோலி முதல் டெஸ்ட் முடிந்தவுடன் இந்தியா திரும்பிய நிலையில் இப்போட்டிக்கு கேப்டனாக ரகானேவும், துணை கேப்டனாக புஜாராவும் நியமிக்கப்பட்டனர். இந்திய அணியில் முகமது சிராஜ், ஷுப்மன் கில் ஆகியோர் தங்களது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். மேலும் ரவீந்திர ஜடேஜாவும் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள், இந்திய அணியின் பந்துவீச்சில் திணறினர். தொடக்க ஆட்டக்காரர் ஜோ பேர்ன்ஸ், ஸ்டீவ் ஸ்மித் மேட் கம்மின்ஸ் என அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மேத்தீவ் வேட், மார்னஸ், ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் அணியை மீட்டனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். தந்தையின் இறுதிச்சடங்கிற்கு செல்லாமல் ஆஸ்திரேலியாவில் அணியுடனே இருந்த இந்திய வீரர் முகமது சிராஜ் 2 விக்கெட்டை வீழ்த்தி சர்வதேச விக்கெட் கணக்கை தொடங்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து களமிறங்கி ஆடி வந்த இந்திய அணி, 36 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்த போது 1 முதல் நாள் ஆட்டம் நேரம் முடிவடைந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டி20 உலக கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

G SaravanaKumar

யூரோ கால்பந்து போட்டி: மைதானத்தில் நிலைகுலைந்த டென்மார்க் வீரர்!

Gayathri Venkatesan

டி20 உலகக் கோப்பை: 89 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி

G SaravanaKumar

Leave a Reply