விளையாட்டு

இந்திய அணியை கலாய்க்கும் முன்னாள் வீரர்கள்!

இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில், 36 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து படுதோல்வி அடைந்ததை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்திய அணியின் தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட்கோலி, டெஸ்ட் போட்டி வரலாற்றில் இதை விட மோசமான பேட்டிங் இருக்க முடியாது எனக்கூறினார். அணி வீரர்களிடம் டெஸ்ட் போட்டிக்கான தீவிரத்தன்மை இல்லை என்ற வேதனை தெரிவித்த அவர், இந்த தோல்வியிலிருந்து வீரர்கள் பாடம் கற்றுக்கொண்டு, அடுத்த டெஸ்டில் வலுவாக மீண்டெழுவர் எனவும் விராட்கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீரர்கள் எடுத்த ரன்களை வரிசைப்படுத்திய இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர ஷேவாக், இந்த ஓ.டி.பி. (OTP) நம்பர் மறந்து விடும் போலுள்ளதே? என ட்விட்டரில் கேலி செய்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் டினோ 36 எனது சீருடை எண் என்றும் ஆஸ்திரேலியா அணி முன்னாள் வீரர் ஞாயிறு ப்ரி என தெரிவித்துள்ளார் (3நாட்களில் போட்டி முடிவடைந்ததை)ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் நேர்த்தியான பந்துவீச்சினால் தோல்வி ஏற்பட்டதாக இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கிரிக்கெட்டில் அசத்திய சிறுமி – சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

Web Editor

7வது முறையாக விம்பிள்டன் சாம்பியன்- ஜோகோவிச் அசத்தல்!

Web Editor

தமிழர்கள் பாதுகாப்பாக இருங்கள்: பிராவோ!

Leave a Reply