செய்திகள்

இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்!

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய கிரிக்கெட் அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள், ஐந்து 20 ஓவர் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இன்றைய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. இதனையொட்டி, இரு அணிகளின் வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.சென்னையிலுள்ள சேப்பாக்க மைதானத்தில் 5 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடதக்கது. முதல் டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

Advertisement:
SHARE

Related posts

பனிப்பாறைகள் ஒரே நேரத்தில் உருகினால் என்னவாகும்?

Gayathri Venkatesan

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் தீ விபத்து

Halley karthi

80 கோடி பேருக்கு இலவச உணவு தானியம்; மத்திய அரசு அறிவிப்பு!

Saravana Kumar

Leave a Reply