உலகம்

இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தானிலும் பரவியது புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று!

இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் பிரிட்டனில் இருந்து வந்த 3 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு பிரிட்டன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் தொற்று சாதாராண கொரோனாவை காட்டிலும் 70% அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கனடா, துருக்கி ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு பயணத்தடைகளை விதித்துள்ளன. இதனிடையே பாகிஸ்தானுன் இன்று முதல் பிரிட்டன் விமானங்கள் தரையிறங்க தற்காலிகமாக தடை விதித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் அந்நாட்டின் சிந்து மாகாணத்தில் பிரிட்டனில் இருந்து வந்த 3 பேருக்கு புதிய வகை கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பிரிட்டனில் இருந்து நாடு திரும்பிய 12 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த 6 பேரில் 3 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் 95% ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளது. இதனை தொடந்து பாகிஸ்தான் அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தீவிரமடையும் போர்; உக்ரைனில் வாழும் இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

G SaravanaKumar

சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 10 பேர் பலி

Web Editor

6 மாத கைக்குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனை!

Gayathri Venkatesan

Leave a Reply