வேளாண் சட்டத்துக்கு எதிராக இந்தியாவில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பிரிட்டன் தலைநகர் லண்டனில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆதரவு குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவளித்திருந்தார். மேலும் இங்கிலாந்து நாட்டின் எதிர்கட்சி எம்பிக்கள் 36 பேரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கடிதங்களை எழுதியிருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மக்கள் ஒன்று திரண்டு இந்தியாவில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.