கொரோனா பரவலின் 2வது அலையால் பாதிக்கப்பட்டுவரும் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,46,786 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.66 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 2,624 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,89 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், இந்தியாவில் கொரோனா பரவல் மிகவும் மோசமான நிலையை அடைந்திருப்பதாக குறிப்பிட்டார். பிரிட்டனில் படித்து வரும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போரீஸ் ஜான்சான் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு உதவ தயார் என தெரிவித்த அவர், எந்த வகையில் உதவலாம் என ஆராய்ந்து கொண்டிருப்பதாக கூறினார். இந்நிலையில், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு வழங்குவது குறித்து பிரிட்டன் அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.