இந்தியா

இந்தியாவில் 1 கோடியை நெருங்கிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 99 லட்சத்தை கடந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 65 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 99 லட்சத்து 6 ஆயிரத்து 165ஆக அதிகரித்துள்ளது.

ஒரேநாளில் 354 உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 709 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 34 ஆயிரத்து 477 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 94 லட்சத்து 22 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 9 லட்சத்து 93 ஆயிரம் பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 15 கோடியே 55 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

வங்கதேசத்திற்கு இலவசமாக 12 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கிய இந்தியா

Gayathri Venkatesan

புதிய போர்விமான உற்பத்தி தொழிற்சாலையைத் திறந்து வைத்தார் ராஜ்நாத் சிங்

Jayapriya

கார் ஓடையில் கவிழ்ந்து இளம் நடிகை காதலருடன் பலி

Ezhilarasan

Leave a Reply