இளைஞர்களிள் விருப்ப ஆன்லைன் விளையாட்டான பப்ஜி மீண்டும் இந்தியாவில் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீனவைச் சேர்ந்த மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதில் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமடைந்திருந்த பப்ஜி விளையாட்டும் ஒன்று. அதன் பின்னர் Tencent Games நிறுவனத்திடம் இருந்து இந்திய உரிமத்தை ரத்து செய்தது தென்கொரிய நிறுவனம். இந்தியாவிற்கான அனைத்து வெளியீட்டு பொறுப்புகளும் பப்ஜி நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ‘பப்ஜி மொபைல் இந்தியா’என்ற பெயரில் மீண்டும் இந்தியாவில் செயல்படுத்த இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அதற்கு ஏற்ற வகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டடது. இந்த அறிவிப்பு இளைஞர்களிடையே உற்சாகத்தை தூண்டியது. ஆனால், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில், பப்ஜி இந்தியா குறித்து எந்தவித அனுமதியும் கோரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட நிறுவனங்கள், புதிய நிறுவனத்தின் பெயரில் மீண்டும் செயல்பட தொடங்கினால் உடனடியாக அனுமதி வழங்கப்படாது. பப்ஜிக்கு அனுமதியளிக்கப்படால் தடை செய்யப்பட்ட மற்ற நிறுவனங்களும் இந்த முறையை கையில் எடுக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால் கடந்த நவம்பர் 21ம் தேதி பப்ஜி மொபைல் இந்தியா என்ற பெயரில் புதிய நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.