உலகம்

இந்தியாவில் மலேரியா பாதிப்பு குறைந்து வருகிறது – உலக சுகாதார அமைப்பு

World Health Organization

இந்தியாவில் மலேரியா பாதிப்பு குறைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள உலக மலேரியா அறிக்கை 2020 படி, இந்தியாவில் மலேரியா பாதிப்பு கடந்த 2018ம் ஆண்டைவிட, 2019ம் ஆண்டில் 17.6 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அதிக மக்கள் தொகையுள்ள நாடுகளில் மலேரியா பாதிப்பு குறையந்து வரும் ஒரே நாடு இந்தியா என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியாவில் மலேரியா பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருவதாகவும் அதன் படி, 2019ம் ஆண்டு மலேரியா பாதிப்பு 21.27 சதவீதமும், உயிரிழப்பு 20 சதவீதமும் குறைந்துள்ளது.2018ம் ஆண்டில் மலேரியா பாதிப்பு எண்ணிக்கை 4,29,928-ஆகவும், உயிரிழப்பு 96-ஆகவும் இருந்தது. 2020ம் ஆண்டு அக்டோபர் வரை இந்தியாவில் ஏற்பட்ட மொத்த மலேரியா பாதிப்பு 1,57,284. கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 45.02 சதவீதம் குறைவு. கடந்தாண்டு இதே காலத்தில் மலேரியா பாதிப்பு 2,86,091-ஆக இருந்தது.

இந்தியாவில் மலேரியா ஒழிப்பு நடவடிக்கை, கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 2016ல் தீவிரப்படுத்தியது. இதற்காக மலேரியா ஒழிப்பு தேசிய திட்டம் தொடங்கப்பட்டது.

2017 முதல் 2022 வரையிலான மலேரிய ஒழிப்புக்கான தேசிய உத்தி திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. இதன் காரணமாக முதல் 2 ஆண்டுகளுக்கு, உயிரிழப்பு 27.7 சதவீதம் மற்றும் 49.5 சதவீதம் குறைந்தது.

2015ம் ஆண்டில் மலேரியா பாதிப்பு 11,69,261ஆகவும், உயிரிழப்பு 385 ஆகவும் இருந்தது. 2017ம் ஆண்டில் மலேரியா பாதிப்பு 8,44,558 ஆகவும், உயிரிழப்பு 194 ஆகவும் குறைந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘முதல் முதலாக ஒலியின் வேகத்தை கடந்த மனிதர்’ சக் யேகர் காலமானார்!

Arun

கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுத்தைக்கு நேர்ந்த விபரீதம்; வைரலாகும் வீடியோ!

Saravana

கண்டங்களைத் தாண்டி மலர்ந்த காதல்

G SaravanaKumar

Leave a Reply