இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 5 மாநிலங்கள் என்னென்ன?

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்கள் பட்டியலில் தமிழகமும் இடம்பெற்றுள்ளது.

உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருவதோடு கொரோனா பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தியுள்ளன. இதுவரை நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 1 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 1,45,000 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 5 மாநிலங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மகாராஷ்டிரா

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதன்மையானதாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. இங்கு இதுவரை 18,92,707 வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள 1,45,477 உயிரிழப்புகளில் 48,648 உயிரிழப்புகள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவை. இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்ரே அடுத்த ஆறு மாதங்களுக்கு மாநிலத்தில் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா

9,08,275 கொரோனா பாதிப்புகள் மற்றும் 12,004 உயிரிழப்புகளுடன் கர்நாடாக மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஆந்திரா

இதனை தொடர்ந்து 8,78,000 கொரோனா வைரஸ் பாதிப்புகளுடன் ஆந்திரா மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு வைரஸ் தொற்றால் இதுவரை 7,074 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாடு

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. தமிழக அரசின் துரிதமான கொரோனா பரிசோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த சில தினங்களாக வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் 8,06,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 11,968 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பில் இதுவரை 7,84,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கேரளா

கொரோனா வைரஸ் பாதிப்பில் கேரளா 5 ஆம் இடத்தில் உள்ளது. இருப்பினும் நாட்டில் அதிகமான புதிய பாதிப்புகளை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் கேராளா முதலிடத்தில் உள்ளது. இங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சமாக உள்ளது. இங்கு இதுவரை 2,786 பேர் உயிரிழந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காங்கிரஸ் காரிய கமிட்டி கூடுகிறது: தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை?

Saravana

ஜம்மு விமானப்படைதளத்தின் மீது ட்ரோன் மூலம் தாக்குதல்: 2 வீரர்கள் காயம்

Halley Karthik

என்ஜினியரிங் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு

EZHILARASAN D

Leave a Reply