முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியாவில் ஒரு கோடியை கடந்த கொரோனா!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரியில் கேரள மாநிலம் திரிசூரில் முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து வந்த மாணவர் மூலம் இந்தியாவில் பரவத் தொடங்கியது. அதன் பின்னர் ஜனவரி 15ம் தேதிக்கு பிறகு சீனாவில் இருந்து வந்தவர்களை கண்காணிக்கும் பணிகளை தீவிரப்படுத்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து, படிப்படியாக கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில், உலகளவில் 7.5 கோடி பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 25,152 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,00,04,599 கோடியை எட்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 347 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,45,136 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சை 3,08,751 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 29,885 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதை அடுத்து, 95,50,712 பேர் மீண்டுள்ளனர்.

குணமடைவோர் எண்ணிக்கையில் முன்னேற்றம் தெரிகிறது. கடந்த மே மாதத்தில் 50,000 ஆக இருந்து குணமடைவோர் எண்ணிக்கை டிசம்பரில் 95 லட்சமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு தரவின் படி இதுவரை 16 கோடி கொரோனா மாதிரி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இறப்பு விகிதம் 1.45% மாகவும், பாதிப்பு விகிதிம் 2.14% மாகவும் உள்ளது.

18.88 லட்சம் பாதிப்பு எண்ணிக்கையுடன் மகாராஷ்டிர முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து 9.07 லட்சம் பாதிப்புடன் கர்நாடகா 2ம் இடத்தில் உள்ளது. 8.77 லட்சத்துடன் ஆந்திரா 3வது இடத்திலும், 8.04 லட்சம் பாதிப்புடன் தமிழகம் 4வது இடத்திலும் உள்ளது. விருப்ப முள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. முதல் கட்டமாக 6 கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனை முயற்சியில் உள்ளன. இந்தியாவில் போதுமான அளவு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஆற்றல் இருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிலிண்டர் விலை ரூ.269 உயர்வு

Janani

“விஜயகாந்த் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்”-தேமுதிக

Web Editor

கொரோனா எதிரொலி: திருப்பதி கோயிலில் இலவச தரிசனத்திற்கான டோக்கன் விநியோகம் நிறுத்தம்

Halley Karthik

Leave a Reply