முக்கியச் செய்திகள் இந்தியா

இங்கிலாந்தை மிரட்டும் புதியவகை கொரோனா; இந்தியாவில் இன்று அவசர கூட்டம்!

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா பற்றி விவாதிக்க இந்தியாவில் மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் இன்று அவசர கூட்டம் நடைபெறவுள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அங்கு புதிய வகை கொரோனா வைரஸால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது இதனை கொரோனா வைரஸின் திரிபாக இருக்கலாம் என கூறுகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த பரவல் மிக வேகமாக இருப்பதால் லண்டனில் உச்சகட்ட மூன்றடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சாதாரண கொரோனா வைரஸின் பரவலை விட இது மிக வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. இது கைமீறி போய்விட்டதாக சுகாதார அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து மட்டுமல்லாமல் நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளிலும் இந்த தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் சில நாடுகள் இங்கிலாந்துக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளன. இந்நிலையில் இங்கிலாந்தை மிரட்டி வரும் கொரோனாவைரஸ் பற்றி ஆலோசனை நடத்த இந்தியாவில் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ராஜினாமாவா? வாய்ப்பே இல்ல… – கர்நாடக முதல்வர்

G SaravanaKumar

சாதிச் சான்றிதழ் கிடைக்கவில்லை; மாணவர்கள் கல்லூரி சேர முடியாத அவலம்

EZHILARASAN D

அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு

G SaravanaKumar

Leave a Reply