லண்டனில் திடீரென பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பால் உச்சகட்ட மூன்றடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அங்கு புதிய வகை கொரோனா வைரஸால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது இதனை கொரோனா வைரஸின் திரிபாக இருக்கலாம் என கூறுகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த பரவல் மிக வேகமாக இருப்பதால் லண்டனில் உச்சகட்ட மூன்றடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1000 பேர் இந்த புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நோய் பரவல் தொடர்பாக கண்டறிய மருத்துவ ஆய்வுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கடுமையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.