இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 13 பேரின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே, புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பா என்பது தெரியவரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு படிப்படியாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது புதிதாக பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் உலகையே பீதியடைய செய்துள்ளது. இதனை எதிர்கொள்ளுதல், வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், புதிய தளர்வுகள் அமல்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, மழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், அரசு எடுத்த நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாகவும், தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை தற்போது குறைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்