ஆசிரியர் தேர்வு தமிழகம்

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 2, 800 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்! – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 2 ஆயிரத்து 800 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் அம்மா மினி கிளினிக்கை திறந்துவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இங்கிலாந்திலிருந்து விமானத்தில் 37 பேர் தமிழகம் வந்திருப்பதாக கூறினார். அவர்களில் 33 பேருக்கு கொரோணா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். அவர்களது ரத்த மாதிரிகள் புனேயில் சோதனை செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டதாக கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எனினும் அவர் உடல்நலத்துடன் உள்ளதாகவும் அவர் கூறினார். தொடரந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இங்கிலாந்திலிருந்து கடந்த சில தினங்களாக விமானம் மூலம் வந்த சுமார் 2 ஆயிரத்து 800 பேர் அரசின் முழு கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். அவர்கள் ஊருக்கு வந்த பிறகு எங்கெங்கு சென்றார்கள் என்பது உறவினர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்ற அவர், பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை என்றும் விஜயபாஸ்கர் அறிவுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முதல் பருவ பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்: சிபிஎஸ்இ மேலாண்மை கூட்டமைப்பு

Arivazhagan Chinnasamy

அம்மா மினி கிளினிக் திட்டத்திற்காக புதிதாக 2,000 மருத்துவர்கள் விரைவில் நியமனம்! – அமைச்சர் விஜயபாஸ்கர்

Nandhakumar

மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது முன்னாள் அமைச்சரின் உடல்!

Niruban Chakkaaravarthi

Leave a Reply