செய்திகள்

ஆ.ராசா விதி மீறி செயல்பட்டு வருகிறார்: அமைச்சர் ஜெயக்குமார்

2ஜி அலைக்கற்றை மேல்முறையீடு வழக்கால் தி.மு.க-வின் வாக்கு வங்கிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ராஜாஜியின் 142 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை பாரி முனையில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்துக்கு மாலை அணிவித்த அமைச்சர் ஜெயகுமார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ராஜாஜி நாட்டுக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியது என தெரிவித்தார்.

மறைந்த தலைவர்களைப்பற்றி அவதூறாகப் பேசக்கூடாது என உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டிருந்தும், ஆ.ராசா அதனை மீறி செயல்பட்டு வருவதாகக் கூறி உள்ளார். கருணாநிதி ஆட்சியைப் பற்றி பேச நிறைய தகவல்கள் உள்ளபோதிலும், மறைந்த தலைவர்கள் குறித்து பேசக்கூடாது என்பதால் நாங்கள் அமைதிகாப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 2ஜி அலைக்கற்றை வழக்கு தி.மு.க-வினரின் தலையில் கத்தி தொங்குவது போல ஆபத்தானது என்றும் அவர் கூறினார். மேலும் பேசிய அவர் தி.மு.க வினர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். ஜெயலலிதா மரண விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி தெரிவித்தார். சூரப்பா விவகாரம் குறித்து, முதல்வரிடம் ஆளுநர் எந்த விசாரணையும் நடத்தவில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் கொரோனா சிகிச்சை மையம்: அமைச்சர் சேகர்பாபு

Halley karthi

’எப்படி கொலை செய்யலாம்?’ கூகுளில் தேடி கணவனை கொன்ற மனைவி!

Vandhana

புலிகளிடம் சிக்கிய இளைஞர்கள் துடிதுடிக்க பலி: ஹெல்மெட்டால் தப்பியவர் கதறல்!

Gayathri Venkatesan

Leave a Reply