மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா மீது மத்திய குற்ற பிரிவு போலீசாரிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த செல்வகுமார் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்த போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகியோர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டி இருந்தார். இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது வெளியில் வெறுப்பை வெளிப்படுத்தும் விதத்திலும் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் வகையிலும் பேசியதாக ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்