விளையாட்டு

ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி… 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. “பாக்சிங் டே டெஸ்ட்” என அழைக்கப்படும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 195 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி வீரர்கள் பொறுமையாக விளையாடி ரன் சேர்த்தனர். கேப்டன் ரகானே 112 ரன்கள் எடுத்து அசத்தினார். ரவீந்திர ஜடேஜா 57 ரன்களும், சுப்மான் கில் 45 ரன்களும் எடுத்தனர். முதல் இன்னிங்சின் முடிவில் இந்திய அணி 326 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 131 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய மாத்யூ வேட் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தனர். எஞ்சிய வீரர்கள் இந்திய அணி பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 3ம் நாள் ஆட்டமான நேற்று இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட ஆஸ்திரேலியா 2 ரன்களே முன்னிலை பெற்றிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் 4ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. அதில் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அந்த அணி 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் பரிகொடுத்தது. இதனையடுத்து 70 ரன்கள் என்ற எளிய இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2 விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டிப்பிடித்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு 1 வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளனர். இப்போடியில் சிறப்பான ஆட்டத்தை

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒலிம்பிக் போட்டியில் இந்திய கோல்ப் வீரர் உதயன் மனே

ரவி சாஸ்திரி உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

EZHILARASAN D

மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை; இந்திய அணி விவரம்

Arivazhagan Chinnasamy

Leave a Reply