விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 அவது டி20 போட்டில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் தொடரை 2-1 என ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் ஏற்கனவே இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் 2 அவது டி20 போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக மேத்திவ் வேடும், ஆர்கி ஷார்டும் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய மேத்திவ் வேட் 32 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். மறுபுறம் ரன் எடுக்க முடியாமல் திணறிய ஆர்கி ஷார்ட் 9 ரன்களை மட்டுமே எடுத்து நடராஜன் பந்தில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து வேடுடன் ஜோடி சேர்ந்த ஸ்மித் நீதான அட்டத்தை வெளிபடுத்தினார். இதனிடையே 58 ரன்கள் எடுத்திருந்தபோது வேட் ரன் அவுட் ஆனதை தொடர்ந்து பின்னர் வந்த வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்திவ் வேட் 58 ரன்களையும் ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்களையும் எடுத்தனர்.

இந்திய அணியின் பந்து வீச்சை பொருத்தவரை தமிழக வீரர் நடராஜன் 2 விக்கெட்டுகளையும் சஹால் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தல ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனை அடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கே.எல் ராகுலும், ஷிக்கர் தவானும் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்த ஜோடி முதல் 5 ஓவர்களில் 50 ரன்களை குவித்து அசத்தியது. இதில் சிறப்பாக ஆடிய ஷிக்கர் தவான் 52 ரன்களிலும் கே.எல் ராகுல் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி அதிரடியாக அடியது. 24 பந்துகளில் 40 ரன்களில் எடுத்திருந்த நிலையில் விராட் கோலி டேனியல் சேம்ஸ் பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

இதனால் ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 46 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சூழலுக்கு இந்திய அணி சென்றது. இந்த இக்கட்டான சூழலில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா ஆஸ்திரேலிய அணியின் பந்துகளை நாளாபுறமும் சிதறடித்தார். இறுதியில் இந்திய அணி 19.4 ஓவர்களிலேயா 195 என்ற இலக்கை கடந்து வெற்றி பெற்றது. இதில் ஹர்திக் பாண்டியா 42 ரன்களுடனும் ஷ்ரேயாஸ் ஐயர் 12 ரன்களுடனும் இறுதிவரை களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி

Gayathri Venkatesan

ஐபிஎல்: மும்பையுடன் இன்று மோதல், தொடருமா சிஎஸ்கே-வின் வெற்றிப் பயணம்?

Halley karthi

சரத்-மணிகா ஜோடி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி!

Gayathri Venkatesan

Leave a Reply