விளையாட்டு

ஆஸி.க்கு எதிரான 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்தியா ஆறுதல் வெற்றி!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் 3 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரை ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ள நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3 ஆவது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஷிக்கர் தவானும் சுப்மன் கில்லும் களமிறங்கினர். இதில் தவான் 16 ரன்களிலும் சுப்மன் கில் 33 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பின்னர் வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் கே.எல் ராகுலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியம் திரும்பினர். மறுபுறம் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்திய கேப்டன் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் தனது 60 அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதனை அடுத்து 63 ரன்களில் விராட் கோலி ஆட்டமிழக்க இந்திய அணி 152/5 என்ற இக்கட்டான சூழலில் இருந்தது. இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியாவும் ஜடேஜாவும் அபார ஆட்டத்தை வெளிபடுத்தினர்.

ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிதறடித்த இருவரும் அரைசதம் கடந்தனர். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 302 ரன்களை எடுத்தது. இதில் ஹர்த்திக் பாண்டியா 92 ரன்களிலும் ஜடேஜா 66 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனை அடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க விரர்களாக கேப்டன் ஆரோன் பிஞ்சும் பிமார்னஸ் லாபுசாக்னேவும் களமிறங்கினர். இதில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிபடுத்திய ஆரோன் பிஞ்ச் அரைசதம் கடந்தார். இருப்பினும் மறுப்புறம் வீரர்கள் அனைவரும் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி சார்பில் கேப்டன் ஆரோன் பிஞ்ச் 75 ரன்களையும் மேக்ஸ்வெல் 59 ரன்களையும் குவித்தனர். இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும் முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கிய தமிழக வீரர் நடராஜன் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ், ரவீந்தர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டி-20 உலகக் கோப்பை: சாம்பியன் பட்டம் வென்றால் இவ்வளவு கோடியா?

Halley Karthik

கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற சிஎஸ்கே

EZHILARASAN D

டிஎன்பிஎல் இறுதிப் போட்டி – கோப்பையைப் பகிர்ந்துகொண்ட கோவை, சேப்பாக் அணிகள்

Web Editor

Leave a Reply