முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆவின் பணி நியமன முறைகேடு; அறிவிப்பை ரத்து செய்த அமைச்சர்

கடந்த அதிமுக ஆட்சியில், ஆவின் துறையில் பணி நியமன முறைகேடு நடைபெற்றதாக கூறி, 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், கடந்த அதிமுக ஆட்சியின்போது 2020ஆம் ஆண்டு ஆவினில் 460 முதுநிலை தொழிற்சாலை உதவியாளர், 46 தொழில்நுட்பாளர் உள்ளிட்ட 138 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. பணி நியமனங்கள் தொடர்பாக முறைகேடு புகார்கள் வந்ததையடுத்து அந்த பணி நியமனங்களுக்கான அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சாக்லெட், பிஸ்கட், பால் பவுடர், 152 பொருட்களை துபாய், கத்தார், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நாள்தோறும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து 36 லட்சம் லிட்டர் பால் ஆவின் கொள்முதல் செய்த நிலையில், தற்போது கூடுதலாக 1.5 இலட்சம் லிட்டர் பால் அதிகமாக கொள்முதல் செய்வதாகவும் குறிப்பிட்டார்.

Advertisement:

Related posts

ஜீன்ஸ் அணிவது குறித்து தாம் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோரிய முதல்வர்

Saravana Kumar

மேற்கு வங்கத்தில் 76% வாக்குகள் பதிவாகியுள்ளன!

Gayathri Venkatesan

சென்னையில் மீண்டும் தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்!

Vandhana