உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள புதரா என்ற கிராமத்தில் 4 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் செயல்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள புதரா என்ற கிராமத்தில் 4 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சிறுவனின் பெற்றோர்கள் வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அங்கிருந்த 30 அடி ஆள்துளை கிணற்றில் எதிர்பாராத விதமாக விழுந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தகவலறிந்து வந்த மீட்புப்படையினர் சுமார் 18 மணி போராடி சிறுவனை மீட்டனர். இருப்பினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.