முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆழ்கடலில் விபத்து: மீனவர்களை மீட்டுக் கொடுக்கவேண்டும் என விஜய் வசந்த் கோரிக்கை!

கோவா அருகே ஆழ்கடலில் விபத்தில் சிக்கிய கன்னியாகுமரி மீனவர்களை மீட்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் விஜய் வசந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்த 9ம் தேதி குமரி மாவட்ட மீனவர்கள் 11 பேர், ஜோசப் பிராங்ளின் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்றனர். கோவாவில் இருந்து 600 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, படகு விபத்துக்குள்ளாகி மீனவர்கள் மாயமாகி உள்ளனர்.

அப்பகுதி மீனவர்கள் அளித்த தகவலை அடுத்து உறவினர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த விஜய் வசந்த், மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்களை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Advertisement:
SHARE

Related posts

வைரலாகும் விராட், அனுஷ்கா குழந்தையின் புகைப்படம்!

Ezhilarasan

மகாராஷ்டிராவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Halley karthi

மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக ரமேஷ் பொவார் மீண்டும் நியமனம்!

Halley karthi