ஆரம்பகாலத்தில் 400 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்ததாக, வேலைவாய்ப்பு முகாமில் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. 200 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று நடத்திய நேர்முகத் தேர்வில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் 3 ஆயிரத்து 450 பேர் தேர்வாகினர். அவர்களுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பணி நியமன ஆணையை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தனியார் நிறுவனத்தில் சம்பளம் குறைவாக உள்ளதாக எண்ண வேண்டாம் என அறிவுறுத்தினார். ஆரம்ப காலத்தில் தானும் 400 ரூபாய் சம்பளத்திற்கு, வேலை பார்த்ததாக கூறிய அமைச்சர், முதல்கல் வெற்றிக்கல்லாக இருப்பதற்கு, இதுவொரு அடிக்கல்லாக இருப்பதை நினைவில் கொள்ளுங்கள் என கூறி, வேலைக்கு தேர்வானர்களை ஊக்கப்படுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்