திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர்கள் உறவினர் வீட்டிற்கு சென்று சென்னை திரும்பி கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த ஈச்சர் லாரி மீது கார் மோதிய விபத்தில் கார் மற்றும் பிக்கப் வாகனம் மோதியதில் காரில் சிக்கி சென்னையை சேர்ந்த கோகுல் மற்றும் யோகராஜ் இருவர் உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த திவ்யா ராகவேந்திரன் விகாஸ் 3 பேர் பலத்த காயமடைந்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்