உலகம்

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் பலி!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவ நிலைகள் மீது தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

தெற்காசியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று. இங்கு தலிபான்கள் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளால் அவ்வப்போது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து பயங்கரவாதிகளை ஒடுக்க ஆப்கானிஸ்தான் ராணுவம் தலிபான் பயங்கரவாதிகளுடன் போரிட்டு வந்தது. சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற போர், அமைதி ஒப்பந்தம் காரணமாக முடிவுக்கு வந்தது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தினால் இரு தரப்பினருக்கும் இடையேயான போர் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அமைதி ஒப்பந்தங்களை மீறியும் அங்கு பயங்கரவாத சம்பவங்கள் அறங்கேறி வருகின்றன.

இந்நிலையில் அந்நாட்டில் உள்ள தலீபான் பயங்கரவாதக்குழு முக்கிய தலைவர் ராணுவ தாக்குதலில் நேற்று கொல்லப்பட்டதை தொடர்ந்து அதற்கு பழி வாங்கும் வகையில் அந்நாட்டின் கிழக்கு மாகாணமான கஸ்னியில் உள்ள ராணுவ நிலைகள் மீது பயங்கரவாதிகள் இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஆகாயத்திலும் இனி அலுவலக வேலை செய்யலாம்!

எல்.ரேணுகாதேவி

அமெரிக்க வரலாற்றில் 2 முறை பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்ட முதல் அதிபரானார் ட்ரம்ப்!

Saravana

ஏழை நாடுகளுக்கு 0.2% மட்டுமே கொரோனா தடுப்பூசி விநியோகம்!

எல்.ரேணுகாதேவி

Leave a Reply