முக்கியச் செய்திகள் தமிழகம்

”ஆன்மீக அரசியலுக்கு வந்தால் கமலை ஏற்போம்”- இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்!

ரஜினியுடன் இணைந்து ஆன்மீக அரசியலுக்கு வந்தால் கமல்ஹாசனை ஏற்றுக்கொள்வோம், என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். இதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ம் தேதி வெளியாகும் என்றும் கூறியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ரஜினியோடு கூட்டணி அமையுமானால், இருவரில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பேசி முடிவெடுப்போம் என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் கமல்ஹாசன், ரஜினியுடன் இணைந்து ஆன்மீக அரசியலுக்கு வந்தால் அவரை ஏற்றுக்கொள்வோம், என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். ரஜினியை பாஜக இயக்கி வருவதாக எதிர்கட்சிகள் கூறுவது உண்மையல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு

Arivazhagan Chinnasamy

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்

Web Editor

தொகுதியின் குரல்; தி.நகர் மக்களின் கோரிக்கைகள் என்ன?

EZHILARASAN D

Leave a Reply