செய்திகள்

ஆன்மிக அரசியல் எங்களுக்கு அவசியமில்லை: சுப வீரபாண்டியன்

திராவிட அரசியலை எதிர்த்து யாரும் நிற்க முடியாது என திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் திமுகவினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர் பாபு, தாயகம் கவி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக இப்போராட்டம் அனுமதியின்றி நடைபெறுவதால் மேடையை அகற்ற காவல்துறையினர் வலியுறுத்தியதையடுத்து காவலர்களுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன், ஆன்மிக அரசியல் எங்களுக்கு அவசியமில்லை. திராவிட அரசியலை எதிர்த்து யாரும் நிற்க முடியாது என்றார். தொடர்ந்து பேசிய தயாநிதி மாறன், நடிகர் விஜய் சர்க்கார் திரைப்படத்தில் வரும் தக்காளி விலை தொடர்பான காட்சியை கூறி விவசாய பிரச்சனையை கூறினார். ஸ்டாலினுக்கு என்ன தெரியும் என முதலமைச்சர் கேட்கிறார், எங்களுக்கு மக்களை தெரியும், அவர்களின் கஷ்டம் தெரியும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஜூன் 13ஆம் தேதி தொடக்கம்

Halley Karthik

கர்நாடகாவில் ஒரே நபர் வயிற்றிலிருந்து 187 நாணயங்கள் அகற்றம்

Web Editor

டவ்தே-வால் பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ரூ.1000 கோடி: பிரதமர் அறிவிப்பு!

Halley Karthik

Leave a Reply