26.7 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா

ஆந்திராவில் மர்மநோய்; ரத்த மாதிரிகளில் அதிக அளவு ஈயம், நிக்கல்!

ஆந்திர பிரதேசத்தில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் நிக்கல் மற்றும் ஈயம் அதிகம் காணப்படுவதாக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் எலூரு பகுதி மக்கள் திடீரென மர்ம நோயால் பாதிக்கப்பட்டனர். அப்பகுதி மக்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மேலும் அவர்கள் விநோத சத்தம் எழுப்புவதாகவும் தகவல் வெளியானது. இதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிப்பதற்காக தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரியில் அதிக அளவு ஈயம் மற்றும் நிக்கல் காணப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இவர்களது ரத்த மாதிரிகள் டெல்லி AIIMS-க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் நிக்கல் மற்றும் ஈயம் அதிக அளவில் கலந்துள்ளதற்கான காரணங்களை கண்டறிவதற்கான ஆய்வை மேற்கொண்டுள்ளனர். தண்ணீர் மற்றும் பாலை பரிசோதனை செய்த போது அதில் பிரச்சனை ஏதும் இருப்பதாக தெரியவில்லை என கூறியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் அப்பகுதி மக்கள் தினமும் பயன்படுத்தும் காய்கறிகள், பழங்களையும் பரிசோதனை செய்து வருகின்றனர்.

இதனிடையே எலூருவில் மர்ம நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

”ஜல்லிக்கட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு; முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” – அமைச்சர் உதயநிதி

Jeni

’இன்னுயிர் காப்போம்’ திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

EZHILARASAN D

பிசிசிஐ-யின் ஒரு போட்டியை ஒளிப்பரப்ப அடிப்படை தொகையாக எவ்வளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

Web Editor

Leave a Reply