முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

ஆசிரியைக்கு மாணவர் பளார்…

ஓசூர் அருகே அரசுப் பள்ளியின் மாணவர் ஒருவர், ஆசிரியையின் கன்னத்தில் அறைந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஓசூர் அருகே உள்ள மாசிநாயகனப்பள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் 11ஆம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவர், ஒழுங்கீனமாக இருந்த மாணவர் ஒருவரைக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மாணவர் ஆசிரியை கன்னத்தில் அறைந்து அவரை கீழே தள்ளி விட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்பு சம்பந்தப்பட்ட மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆகியவை வலியுறுத்தி உள்ளன.

Advertisement:
SHARE

Related posts

அரசு பேருந்தில் பெண்கள் மீது ஆசிட் வீசிய வடமாநில இளைஞர்கள்!

Jeba Arul Robinson

ஆஸ்திரேலியாவை பந்தாடிய இந்தியாவின் இளம்படை; ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை!

Saravana

சேலம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் பணிகளை எடப்பாடி பழனிசாமி ஆய்வு

Arivazhagan CM