முக்கியச் செய்திகள் இந்தியா

ஆசியாவின் 50 பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த சோனு சூட்!

லண்டனை சேர்ந்த ‘Eastern eye’ என்ற வார இதழ் ஆசியாவின் 50 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் சோனு சூட் முதலிடத்தை பிடித்துள்ளார்.

கொரோனா காலத்தில் மக்கள் மத்தியில் ரியல் ஹீரோவாக உருவெடுத்தவர் நடிகர் சோனு சூட். பல்வேறு மாநிலங்களில் சிக்கித்தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப உதவி செய்தார். இதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் உதவி கேட்டு கோரிக்கை வைப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் ஆசியாவின் 50 சிறந்த பிரபலங்கள் பட்டியலில் சோனு சூட் முதலிடம் பிடித்துள்ளார். லண்டனை சேர்ந்த பத்திரிகை ஒன்று இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. மக்கள் மத்தியில் அவர்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு உள்ளது என்பதை பொறுத்தே இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அந்தவகையில் கொரோனா காலத்தில் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவராக மாறியுள்ளார் சோனு சூட்.

இதுதொடர்பாக சோனு சூட் கூறுகையில், ‘நாட்டு மக்களுக்கு உதவி செய்ய வேண்டியது எனது கடமை என நினைத்தேன். எனக்குள் அந்த உணர்வு தோன்றியது. மக்கள் அனைவரும் என் மீது நிறைய அன்பு, நம்பிக்கை வைத்துள்ளார்கள். உதவி செய்யும் எண்ணத்தை கடைசி வரை விடமாட்டேன்’ என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு

Halley Karthik

ஒவ்வொரு துறை செயலாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய நிலை ஏற்படும் – நீதிபதிகள் காட்டம்

EZHILARASAN D

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்

G SaravanaKumar

Leave a Reply